Categories
தேசிய செய்திகள்

பார்லி.யில் பாஜக பெண் எம்பி கதறல்…..எதற்காக தெரியுமா…? வெளியான தகவல் இதோ…!!!!!

மேற்கு வங்க மாநிலத்தில், சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜக எம்பி ரூபா கங்குலி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து துணைத்தலைவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை மாநில போலிசிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி அமைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இந்த வழக்கின் போக்கு குறித்து வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அன்று அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் மேற்கு வங்க பாஜக எம்பி ரூபா கங்குலி பேசியுள்ளதாவது, தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்கொள்கிறோம். இதனால் மக்கள் அச்சத்தில் வங்காளத்தை விட்டு தினமும் வெளியேறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் பிர்பும் சம்பவத்தில் இறந்தவர்களை, முதலில் சித்ரவதை செய்து அதன்பின் அவர்களது கை, கால்களை உடைத்து, ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டி தீ வைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபையை வலியுறுத்துகிறேன். மேலும் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதால், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு பாஜக எம்பி ரூபா கங்குலி பேசியுள்ளார்.

Categories

Tech |