மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் யஷ்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் யஷ்சோன்கியா. இவர் பிறந்த அடுத்த நாளே கண்ணில் குளுக்கோமா நோய் தாக்கம் இருந்ததை கண்டறியப்பட்டது. அதன் பிறகு யஷ் தனது 8 வது வயதில் பார்வை திறனை முற்றிலும் இழந்தார். அதனைத் தொடர்ந்து 5 ஆம் வகுப்பு வரை சிறப்பு பள்ளியில் பயின்று, அதற்குப் பிறகு வழக்கமான பள்ளியில் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து பயின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு என்னுடைய கல்வி நிறுவனத்தில் பிடெக் படிப்பை நிறைவு செய்தார். அவருக்கு ரூ.47 லட்சம் ஊதியத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மென்பொறியாளர் பணி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து யஷ் செய்தியாளர்களிடம் கூறியது, திரை வாசிப்பு மென்பொருள் உதவியுடன், என்னுடைய கல்வியை நிறைவு செய்தேன். வேலை தேடிக் கொண்டிருந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பித்தன். இணைய வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு பிறகு அந்த நிறுவனத்தில் மென்பொறியாளாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். பெங்களூரில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் விரைவில் பணி சேர உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சோண்கியாவுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி தெரிவித்த தந்தை யஷ்பால் மென்பொறியாளராக வேண்டும் என்ற மகனின் கனவு பெரும் போராட்டங்களுக்குப் பிறகு நினைவாகியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.