ரோப்கார் பெட்டி பாறையில் உரசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்றது சாமியை தரிசனம் செய்கின்றனர். இங்கு பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில்களும், ரோப்காரும் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் 12 மணிக்கு மலை கோவிலுக்கு செல்ல பக்தர்கள் ரோப்கார் பெட்டியில் ஏறினர். சிறிது தூரம் சென்ற பிறகு எதிர்பாராதவிதமாக ரோப் கம்பிவடத்தில் பொருத்தப்பட்டிருந்த கடைசி பெட்டி அருகே இருந்த பாறையில் உரசியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து அபய குரல் எழுப்பியுள்ளனர்.
இதனை பார்த்ததும் ரோப்கார் நிலைய பணியாளர்கள் ரோப்கார் இயக்கத்தை நிறுத்தி பெட்டியை பார்வையிட்ட போது லேசான சேதம் ஏற்பட்டிருந்தது. பின்னர் அந்த பெட்டியில் இருந்து பக்தர்கள் பத்திரமாக கீழே இறங்கினர். இது குறித்து அறிந்த இன்ஜினியர்கள் குழுவினர் ரோப்கார் நிலையத்திற்கு சென்று பெட்டியை சோதனை செய்த போது அதிக பாரம் ஏற்றியதால் பெட்டி பாறையில் உரசி சேதமடைந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.