பாறைகளைத் துளையிடும் அதிநவீன கருவியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது.
அமெரிக்க நாட்டில் உள்ள எர்த்கிரிட் நிறுவனம் அதிக வெப்பத்தால் பாறைகளை துளையிடும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவியின் மூலம் 1 நாளைக்கு 1 கிலோமீட்டர் தூரம் வரை துளையிடலாம். இந்த கருவி சுரங்கம் தோண்டுவதற்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படும்.
இந்த கருவியின் மூலம் 1 மீட்டர் துளையிடுவதற்கு 300 அமெரிக்க டாலர்கள் செலவாகும். இந்த இயந்திரமானது தற்போது இருக்கும் இயந்திரத்தை விட 100 மடங்கு ஆற்றல் மிக்கதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அதிநவீன பாறை துளையிடும் கருவி மூலம் பொருட்செலவும் குறையும்.