பாலக்காடு அருகே அந்தரத்தில் சிறிதும் பயம் இல்லாமல் 72 வயது பாட்டி சாகசம் செய்தது பெரும் வைரலாகியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 72 வயதான பாட்டி வின்ச் என்று அழைக்கப்படும் ஒரு வகை சாகசத்தில் ஈடுபட்டு காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பாலக்காடு அருகே உள்ள ஒரு பூங்காவில் சுற்றுலாவுக்கு சென்ற இந்த பாட்டி வின்ச்சில் பயணம் செய்வதற்கு ஆசைப்பட்டார். இதை தொடர்ந்து பாட்டி துளியும் பயம் இல்லாமல் தைரியமாக சவாரி செய்துள்ளார்.
சேலை அணிந்திருந்த அவர் சீட்பெல்ட் மற்றும் இருக்கையுடன் இறுக்கி பிடித்துக்கொள்ளும் பாதுகாப்பு பெல்ட்களை அணிந்த பின் பாதுகாப்பாக சவாரி செய்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது “நான் பயப்படவில்லை இதை மிகவும் விரும்புகிறேன். இது குதூகலமாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.