ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாலக்காடு டவுன் பகுதியில் இருந்து ஈரோடு செல்லும் ரயில் நாளை முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ரயில் வியாழக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் இயங்கும். இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து தினமும் மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு இரவு 7:10 மணி அளவில் ஈரோட்டை வந்தடையும். அதன் பிறகு கோயம்புத்தூருக்கு மாலை 4:17 மணிக்கும், வட கோவைக்கு 4:27 மணிக்கும், பீளமேடு பகுதிக்கு 4:37 மணிக்கு, சிங்காநல்லூருக்கு 4:42-க்கும், இருகூருக்கு 4:49-க்கும், சூலூருக்கு 4:57-க்கும், சோமனூருக்கு 5:09-க்கும், வஞ்சிபாளையத்துக்கு 5:19, திருப்பூருக்கு 5:29-க்கும், ஊத்துக்குளிக்கு 5:49-க்கும் செல்லும்.
அதன் பிறகு ஈரோட்டில் இருந்து பாலக்கோட்டிற்கு செல்லும் முன் பதிவு இல்லா ரயில் ஜூலை 30-ஆம் தேதி முதல் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7:15 மணிக்கு புறப்பட்டு, ஊத்துக்குளிக்கு 7:59-க்கும், திருப்பூருக்கு 8:13-க்கும், வஞ்சிபாளையத்துக்கு 8.24-க்கும், சோமனூருக்கு 8:34-க்கும், சூலூருக்கு 8:44-க்கும், இருகூருக்கு 8:51-க்கும், சிங்காநல்லூருக்கு 8:56-க்கும், பீளமேடுக்கு 9:04-க்கும், வட கோவைக்கு 9:14-க்கும், கோயம்புத்தூருக்கு 9:30-க்கும் சென்று காலை 11:45 மணியளவில் பாலக்காட்டை சென்றடையும்.