கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் இருக்கிறது. இந்த பாலம் இது ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். இந்நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மீன்பிடித்து கொண்டிருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதனால் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு இளம்பெண்ணை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று இளம் பெண்ணிடம் விசாரித்தனர். அந்த விசாரணையில் இளம்பெண் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் காதலர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டதால் காதலன் பேசாமல் இருந்துள்ளார் பலமுறை அவருக்கு போன் செய்தும் அந்த வாலிபர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக இளம்பெண் கூறியுள்ளார். அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.