Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளம்…. சிக்கிய லாரியின் சக்கரங்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

தரைப்பாலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் லாரியின் சக்கரங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்-நத்தம் இடையே நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை பிரிவு வரை இருக்கும் சாலையில் பெரிய மற்றும் சிறிய பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையம் அருகே தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கட்டிட கழிவுகளை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று ஏ.பி நகரில் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து அங்குள்ள தரைப்பாலத்தில் சென்ற போது திடீரென பள்ளம் ஏற்பட்டு லாரியின் பின் சக்கரம் பள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரி ஓட்டுநரான நாகராஜ் என்பவர் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். அதன்பிறகு பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரி பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, தரமற்ற முறையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டதால் திடீர் பள்ளம் ஏற்பட்டு விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தை பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே தரை பாலத்தை ஆய்வு செய்து தரமான முறையில் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |