பிரதமர் மோடியின் கார் போராட்டக்காரர்கள் நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக வினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று பஞ்சாபில் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக திட்டமிட்டிருந்தார். மேலும் பெரோஸ்பூரில் 42,750 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தார். தொடர்ந்து நிலவி வந்த மோசமான வானிலை காரணமாக விமானத்தில் பயணம் மேற்கொள்ளாமல் காரில் பயணம் செய்தார். இதனைத்தொடர்ந்து மோடி பஞ்சாப் மாகாணம் செல்லும்பொழுது போராட்டக்காரர்களால் அவருடைய கார் நிறுத்தப்பட்டது. இதனால் அவரது பயணம் தடைபட்டது. மேலும் அவருடைய கார் ஒரு கான்வாய் பாலத்தின் மீது 15 நிமிடத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மோடி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார்.
மேலும் இது தொடர்பாக பாஜகவினர் பஞ்சாப் போலீசார் போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சதித்திட்டம் தீட்டியுள்ளதாக குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், ஒரு பிரதமர் கார் இவ்வாறாக தடுத்து நிறுத்தப்பட்டது சமீபகாலமாக நடைபெறாத ஒரு விஷயம் என்று கூறினார். ஆனால் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்ர ந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், பாஜக தலைவர் நிதானமிழந்து பேசுவதாகவும் மோடியின் பாதுகாப்பிற்கு அவருடன் இருந்த எஸ்பிஜி தான் பொறுப்பு எனவும் மேலும் மோடியின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் அவர்கள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி பேசவிருப்பதாக அறிவிக்கப்பட்ட அந்த கூட்டத்தில் மக்கள் யாரும் வரவில்லை. வெறும் சேர்கள் மட்டும்தான் இருந்தன எனவும் இதனாலேயே பிரதமர் மோடி திரும்பி சென்றுவிட்டார். எனவும் கூறியுள்ளார் இந்த சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.