பாலத்து முனியப்பன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி சிறப்பாக நடந்து முடிந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் நாட்டறம்பள்ளியில் பாலத்து முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது.
மேலும் இந்தப் பணியில் தன்னார்வலர்கள், பக்தர்கள் என பல கலந்து கொண்டு உண்டியல் பணத்தை எண்ணி உள்ளனர். இதில் 3,72,298 ரூபாய் காணிக்கையாக வந்திருந்தது. இந்த பணியின் போது உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் கோவிலின் செயலாளர்கள் ஜீவானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.