Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலம் இல்லை…. இறந்தவரின் உடலை ஆற்றில் நீந்தி… எடுத்து சென்ற கிராம மக்கள்..!!

நாகர்கூடல் அருகில் பாலம் இல்லாததால் இறந்த முதியவரின் உடலுடன் கிராம மக்கள் ஆற்றை நீந்தி கடந்து சென்றுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் 80க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் நாகாவதி அணைக்கு செல்லும் நீர்வழி பாதையில் பாலம் இல்லாததால் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆத்து கொட்டாய் கிராமத்தில் 80 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.

அவரை கிராம மக்கள் நாகாவதி அணை நீர் வழிப்பாதையை கடந்து கழனிகாட்டூர் கிராமத்திலுள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதற்கு லாரி டியூப்புகள் மீது பாடை அமைத்து அதன் மீது இறந்த முதியவரின் உடலை வைத்துக்கொண்டு ஆற்றில் நீந்தி சென்று கழனி காட்டூர் கிராமத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது, ஆத்து கொட்டாய் – கழனிகாட்டூர் இடையே உள்ள நாகாவதி அணை நீர் வழிப்பாதை இடையே பாலம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து மழைக்காலங்களில் ஏற்படும் அபாயகர நிலையில் ஆற்றை கடக்கும் மாணவ-மாணவிகள், பொது மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையில் பாலம் அமைத்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |