Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பாலம் கட்டும் பணி…. இரும்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

இரும்பு கம்பியை திருடிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலநாகூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிய பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 2 மர்ம நபர்கள் அங்கிருந்த 119 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்றுவிட்டனர்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிந்த காவல்துறையினர் இரும்பு கம்பிகளை திருடியதற்காக மாறன் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாகியுள்ள 14 வயது சிறுவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |