பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில், தோண்டப்பட்ட குழியில் பைக்கில் வந்த 2 பேர் விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபியில் ஈரோடு – சத்தி சாலையில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்த பணிக்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குருமந்தூர் மேட்டிலிருந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் குழிக்குள் விழுந்து விட்டார்கள். இந்த சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குழி உள்ளே படுகாயத்துடன் கிடந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, பெரிய அளவில் பள்ளம் தோண்டி உள்ளார்கள். ஆனால் அங்கு அறிவிப்பு பலகை எதுவும் வைக்கபடவில்லை. எனவே உடனே அங்கு அறிவிப்பு பலகை வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் பணியை விரைவில் முடித்து பள்ளத்தை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்கள்.