வேலூர் பாலாற்றின் கரையோரம் பத்தாயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக பனை மரங்கள் நடப்பட்டு வருகின்ற நிலையில் இந்த வருடம் கருங்கம்புத்தூர் பாலாற்றில்சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு பனை விதைகள் நட முடிவு செய்யப்பட்டு அதற்கான விதைகளும் சேகரிக்கப்பட்டது. இந்த நிலையில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியானது தொடங்கியுள்ளது. இதில் தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் பங்கேற்றார்கள்.