பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள விசித்திரன் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. அடுத்ததாக இவர் இயக்கும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பாலா, அதர்வா கூட்டணியில் வெளியான பரதேசி படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இயக்குனர் பாலா படங்களை இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் தயாரிப்பில் நாச்சியார் திரைப்படம் வெளியாகியிருந்தது.
BStudio bala presents #visethiran planning for November release 👍🙏@behindwoods @rameshlaus @itisprashanth @igtamil @sri50 pic.twitter.com/73Z29lYkql
— RK SURESH (@studio9_suresh) September 22, 2021
இதைத் தொடர்ந்து பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ‘விசித்திரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. என்.பதம் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூர்ணா, மதுஷாலினி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ஜோசப் என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் . இந்நிலையில் விசித்திரன் படத்தை வருகிற நவம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.