விவாகரத்துக்குப் பின் பாலாவும் முத்துமலரும் திருமண விழாவில் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் 2004 ஆம் ஆண்டு கோடீஸ்வரரின் மகலான முத்துமலரை பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன்பு விவகாரத்து செய்துள்ளனர்.
இவர்கள் விவாகரத்துக்கு பின் தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண விழாவில் இருவரும் தனித்தனியாக கலந்துகொண்டனர். மகள் பிரார்த்தனா அம்மாவுடன் வந்திருந்தார். அப்போது தந்தையிடம் சென்று மடியில் அமர்ந்து கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார் பிராத்தனா. பாலா சென்றதும் பிராத்தனா அம்மாவின் மடியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். இவ்வீடியோ வைரலாகி வருகிறது. இதை பார்த்தவர்கள் குழந்தைக்காகவாது இருவரும் சேர்ந்து வாழ்ந்து இருக்கலாம் என கூறுகின்றனர்.