Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாலா-முத்துமலர் பிரிய காரணம் என்ன…? கோடம்பாக்கத்தினர் திடுக்கிடும் தகவல்…!!!

இயக்குனர் பாலாவும் அவரது மனைவியும் பிரிவது குறித்து கோடம்பாக்கத்தினர் கூறுவது அதிர்ச்சி அளிக்கின்றது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் தேனியைச் சேர்ந்த முத்து மலர் என்பவரை 2004 ஆம் ஆண்டு மதுரையில் கல்யாணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. மனைவி மிகவும் அழகாகவும் சிலை மாதிரி இருப்பதாகவும் அனைவரும் கூறினார்கள். இத்தம்பதியினருக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறாள். இந்நிலையில் இவர்கள் திருமணமாகி பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதனையடுத்து கோடம்பாக்கத்தில் விசாரணை செய்தபோது அவர்கள் கூறியுள்ளாதாவது பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து செய்தது ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இது நாங்கள் எதிர்பார்த்தது தான். சென்ற சில வருடங்களாகவே இவர்களுக்குள் பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இவர்களுக்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கு ஒன்றுமில்லை இனி பிரிந்து விடலாம் என முடிவெடுத்துவிட்டனர். சேர்ந்து வாழ்ந்து அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை விட பிரிந்து வாழ்வதே மேல் என நினைத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சென்றுவிட்டார்கள்.

Categories

Tech |