Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக்,ஐ.டி.ஐ படிக்கும் மாணவிகளுக்கு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக் செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுவதுமாக இலவச கல்வி, இலவச பாட புத்தகங்கள் வழங்கி வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களை உயர்கல்வி பயில ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் முயற்சியால் நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனால் விரைவில் டெட் தேர்வை நடத்தி  புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது. இதனையடுத்து தற்போது டெட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையிலும், கல்லூரி அரசு மாணவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையிலும் மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |