Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை…. இன்று(ஜூன் 23) முதல் ஜூலை 8 வரை விண்ணப்பிக்கலாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை தொடர்பாக புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தகவல் உதவி மையத்தை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று வரை 42,716 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பொறியியல் காலியிடங்கள் உள்ளது.

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இன்று முதல் ஜூலை 8ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |