தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 1060 விரைவுரையாளர் பணிக்கு தேர்வு செய்வதற்கான போட்டி வருகின்ற 28, 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே தேர்வு மையங்களை ஊரில் இருந்து பல கிலோ மீட்டருக்கு தள்ளி அமைக்கப்பட உள்ளது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வகை தொழில்நுட்ப கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் 1,35,000 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்கள் ஊரில் இருந்து பல கிலோ மீட்டருக்கு தள்ளி வைக்கப்பட்டு இருப்பதை தேர்வு எழுதுபவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு கணினி மூலம் ஆன்லைனில் முறைப்படி போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு 4 நாட்களில் 8 வேலையாக போட்டிகள் நடத்தப்படும். தேர்வில் முறைகேடு நடப்பதை தவிர்ப்பதற்கு என்று கூறி தேர்வு மையங்களை மிகத்தொலைவில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வு எழுதுபவர்களுக்கு மதுரை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வாளர்கள் எந்த மையத்தில் தேர்வு எழுதப் படவேண்டும் என்பது தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் தேர்வு எழுதுபவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்துக்குச் செல்ல ஒரு நாள் பயணம் மற்றும் ஒரு நாள் ஓய்வு என இரண்டு நாள் முன்பே செல்ல வேண்டும். மேலும் அவர்கள் அங்கு அறை எடுத்து தங்குவதற்காக 4000 முதல் 6000 வரை செலவழிக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் 400-500கிலோமீட்டர் பயணித்து பழக்கம் இல்லாத இடத்தில் தங்கி உணவை உட்கொண்டு தேர்வு எழுதுவது மிகவும் கொடுமையானது.
மேலும் ஒரு சில நாட்களில் தீபாவளி பண்டிகை வருவதால் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இயக்கப்படாத சூழ்நிலையை தேர்வர்களை அலைக்கழிப்பது பெரும் தண்டனையாகும் என்றும் தேர்வர்களின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என்று கூறினார். இதையடுத்து விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் அதற்கான தேர்வுகளை அவர்களின் சொந்த மாவட்டத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவுக்கு தள்ளிச் சென்று தேர்வு எழுத வைப்பது சரியானது இல்லை என்று அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து தேர்வுமுறை தவறுகளை செய்ய முடியாத அளவுக்கு மாற்றினால் எந்த ஒரு முறைகேடும் நடைபெறாது. அதனைப்போல ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் ஏதும் நடந்தால் தேர்வர்களை கண்டித்துவிட்டு தேர்வு எழுத வைத்தால் கூட முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அணுகுமுறையால் முறைகேடுகள் இல்லாமல் போட்டித் தேர்வுகளை நடத்தும் திறன் இல்லை என்பது தெரிகிறது. இதனிடையே 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கான நீட் தேர்தலில் தமிழ்நாடு மாணவர்களுக்கு ராஜஸ்தான் கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த அணுகுமுறையே தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுகுறித்து கடுமையாக ஆலோசனை செய்தது. அப்போது தேர்வு மையங்கள் வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டதை கண்டித்த தமிழ்நாடு, விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு மற்றும் வெளி மாவட்டங்களில் நடத்துவது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பினார்.
எனவே பல்வகை பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என்றும் இதை செய்வதற்கு போதிய அவகாசம் இல்லை என்றால் போட்டித்தேர்வு சில வாரங்கள் ஒத்திவைத்து குறைகளை சரி செய்த பின்னர் தேர்வு நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார் என்று இதில் தெரிவித்துள்ளார்.