தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 1060விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், 2017-2018 ஆம் ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.அதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தேர்வுகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.இறுதியாக அக்டோபர் 27-ஆம் தேதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தேர்வர்களுக்கு 500 கிலோ மீட்டர் தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால் மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நுழைவுச் சீட்டை www.trb.tn.nic என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கணினிவழி தேர்வாக 200க்கும் மேற்பட்ட மையங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெற உள்ளது.