தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகளை வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2017-2018 ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2019ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து கணினி வழி தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை நடைபெற்றது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடை குறிப்புகள் ஆசிரிய தேர்வு வாரிய இணையதள www.trb.tn.nic.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி மாலைக்குள் ஆட்சேபனை ஏதும் இருப்பின், உரிய சான்றுடன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.