Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு…. உடனே இத பண்ணுங்க…. நாளையே கடைசி நாள்….!!!

தமிழகத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கடந்த மார்ச் 11ஆம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பில் 2017-18 ஆண்டுக்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர்காண தேர்வுகள் 2021 டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆன்லைனில் நடந்தது. பின் இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவு மற்றும் இறுதி விடை குறிப்புகள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை மார்ச் 18-ம் தேதிக்குள் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |