ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 2017-2018 ஆம் ஆண்டுகாலம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களில் காலியாக இருந்த 1060 இடங்களுக்கு நேரடி நியமனம் மற்றும் பணிக்கு நேற்று சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி இந்த பணி தேர்வில் நேர்காணல் எதுவும் கிடையாது.
தேவர்கள் போட்டி எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்,கூடுதல் கல்வி தகுதிக்கான மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சான்றிதழ் சரிபார்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது. இதன் மூலமாக நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என தேர்வர்களுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. தேவர்கள் வேறு விதமான தகவல்கள் எதையும் நம்ப வேண்டாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.