பாலித்தீன் கவரை விழுங்கிய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாரனேரி எம்.துரைசாமிபுரத்தில் கார்த்தீஸ்வரன்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பூவிழி என்ற பெண் குழந்தையும், கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் மசாலா பாக்கெட் பாலித்தீன் கவரின் ஒரு பகுதியை கலைக்கதிர் விழுங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தையை பெற்றோர் சிவகாசியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.