Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாலின் முழுமையான சத்துக்களை பெற இந்த நேரத்தில் பருகுங்கள்..!!

பாலை இரவு சாப்பிடுவது நல்லதா..? காலையில் சாப்பிடுவது நல்லதா..?என்று நாம் அறிந்திருக்க மாட்டோம் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைப்பதற்கு இவ்வாறு பாலை பருகுங்கள்..

பால் தண்ணியாக  இருக்கிறது என்று சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால் தண்ணீரை போல் இல்லாவிட்டால்தான் அதன் தரம் குறித்து சந்தேகப்பட வேண்டும். ஏனென்றால் பாலில் 87 % தண்ணீர்தான் இருக்கிறது, 13 % தான் இதர வேதிப்பொருட்கள், மீதம் 4% கொழுப்பு, 9 % புரதம், லாக்டோஸ் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் ஆகும்.

இந்த நிலையில் உள்ள பால், தண்ணீர் பாலகத்தான் காட்சியளிக்கும். இது தான் உடலுக்கு நல்லது. ஒருவேளை பால் கெட்டியாக இருந்தால் ஜெலட்டின், மரவள்ளிக்கிழங்கு மாவு, ஜவ்வரிசி போன்ற வஸ்துகள் ஏதாவது சேர்க்கப்பட்ட பாலாக தான் இருக்க வேண்டும், என்று பாலை பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

பொதுவாக உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட்டீன் பெற சிறந்த வழி தவறாமல் பால் குடிப்பது தான். ஆனால் பால் குடிப்பது எப்பொழுது நல்லது.? பகல் வேளையில் குடித்தால் நல்லதா.? இரவு வேளையில் குடித்தால் நல்லதா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்.

பாலை குறிப்பிட்ட நேரத்தில் குடிப்பதால் குறிப்பிட்ட ஆரோக்கியம் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எந்த நேரத்தில் குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த குறிப்பில் பார்க்கலாம்..

காலை உணவின் பொழுது அதிக அளவு புரோட்டீன் வேண்டுமென்றால் காலையில் குடிப்பது நல்லது. மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோட்டீன்  தவிர பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் விட்டமின்கள் போன்றவையும் உள்ளது.

காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் காலையில் பால் குடிப்பதன் மூலம் புரோட்டின் மற்றும் கால்சியம் கிடைத்து எலும்புகளும் தசைகளும் வளர்ச்சி பெறுவதோடு எலும்புகளை வலுவாக்கவும் ஆரம்பிக்கும்.

நாள் முழுவதும் பசி எடுக்க கூடாது என்று நினைப்பவர்கள் காலையில் பால் குடிப்பது நல்லது. ஆனால் பாலை குடித்தபின் வயிறு உப்புசத்துடன் இருப்பதை உணர்ந்தால் காலையில் குடிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

அதேபோல இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலை வெதுவெதுப்பாக  குடிப்பது நல்லது. இதனால் மனம் அமைதி அடைந்து விரைவில் ஆழ்ந்த தூக்கத்தை பெற முடியும்.

முக்கியமாக நாள் முழுவதும் உழைத்து, களைத்து, மனம் சோர்ந்து இருக்கும் பொழுது அந்த மனம் சோர்வில் இருந்து வெளிவர இரவில் ஒரு டம்ளர் பால் கட்டாயம் குடியுங்கள்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இரவில் பாலை தவிர்ப்பது நல்லது. மேலும் இரவில் பால் குடித்தால் செரிமான பிரச்சனை ஏற்படும் என்பவர்கள் பாலை தவிர்ப்பது நல்லது. எப்பொழுது பால் குடிப்பதாக இருந்தால் வெதுவெதுப்பான நிலையில் பால் குடிப்பது நல்லது. இதனால் செரிமானம் சிறக்கும்.

அளவுக்கு அதிகமான பாலை குடிப்பது நல்லதல்ல ஒரு நாளைக்கு 150 மில்லியில் இருந்து 200 மில்லி பால் போதுமானது..

Categories

Tech |