தமிழகத்தில் இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் அத்து மீறல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் திண்டுக்கல் பாலியல் அத்துமீறல் தொடர்பாக தொலைபேசி மூலம் புகார் தரலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலியல் தொடர்பாக புகார் அளிப்பவர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். இலவச தொலைபேசி எண் 1098 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். 7598866000 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல் அனுப்பலாம் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை 0451-2460725 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.