Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பாலியல் உறவுக்கு அழைத்த திருநங்கைகள்…… மறுத்த இளைஞர்கள்….. பின்னர் நடந்த கொடூரம்….!!!

வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞரை திருநங்கைகள் பாலில் உறவுக்கு அழைத்து பின்னர் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(24), பில்டிங் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணியை முடித்துவிட்டு மதுரவாயல் மேம்பாலம் அருகே தனது பைக்கில் சென்றுக்கொண்டிருந்த போது டார்ச் லைட் அடித்த படி திருநங்கைகள் அவரது வாகனத்தை வழிமறித்து பாலியல் உறவுக்கு அழைத்துள்ளனர். அவர் வர மறுத்து பைக்கை எடுக்க முயன்ற போது அருகே உள்ள புதரில் இருந்து வெளியே வந்த 2 பேர் கொண்ட கத்தியை காட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் , செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இது குறித்து அவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்று அந்த வழியே வருபவர்களிடம் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.

 

Categories

Tech |