பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் பெண் குழந்தைகளுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி பாலியல் மற்றும் கூட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை மற்றும் ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.