பாலியல் குற்றங்களை தடுக்க இதுதான் சிறந்த வழி என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சென்னை மாநகராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றது. இதனை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில துணைத் தலைவர் வி பி துரைசாமி ஆகியோர் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து மனுக்களை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது: “தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விருப்ப மனு பெற்று வருகிறது.
தேர்தல் தேதி இன்னும் அறிவிக்காத காரணத்தினால் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யவில்லை. ஆனால் திமுக உடனான தேசிய ஜனநாயக கூட்டணி தொடரும். தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரூரில் நடந்த பாலியல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்கின்ற புரிதல் மக்களுக்கு வந்தால் மட்டுமே இந்த குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பயம் ஏற்படும். காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்து விரைவில் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.