மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியானது நடைபெற்று வரும் நிலையில், அங்கு கலாசாரத் துறை மந்திரியாக உஷாதாக்குர் என்ற பெண் பதவிவகித்து வருகிறார். இந்தூர் மாவட்டத்தில் அவர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோவ் தொகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உஷாதாக்குர் கலந்துகொண்டார்.
அப்போது உஷாதாக்குர் பேசியதாவது “பெண்களை கற்பழிப்பவர்களை பகிரங்கமாக தூக்கிலிடவேண்டும். மேலும் அவர்களது உடலுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூட அனுமதிக்கக் கூடாது. அவர்களின் உடலை கழுகுகள் மற்றும் காகங்கள் கொத்தி தின்னட்டும். அதனை ஒவ்வொருவரும் பார்க்கும் போது, யாருக்குமே பெண்களை தொட தைரியம் வராது” என்று அவர் பேசினார்.