Categories
தேசிய செய்திகள்

பாலியல் சீண்டலை தடுக்க முயன்ற பெண்…. முகத்தில் 118 தையல்கள்…. பெரும் கொடூர சம்பவம்….!!!

மத்திய பிரதேச மாநில டிடி நகர் ரோஷன்புராவில் அமைந்துள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார். அப்போது பேக்கை பார்க்கிங் செய்வது குறித்து பெண்ணிற்கும் மூன்று நபர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல் பெண்ணே ஆபாசமான வார்த்தைகளால் கிண்டலடித்து பேசியது மட்டுமில்லாமல் விசிலடித்து உள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் துணிச்சலுடன் மூன்று பேரில் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து தம்பதிகள் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது அந்த கும்பல் பயங்கர கோபத்துடன் பேப்பரை வெட்டும் கத்தியை கொண்டு பெண்ணின் முகத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயமடைந்த பெண்ணே அவரது கணவர் மருத்துமனை கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும பாதிக்கபட்ட பெண்ணின் முகத்தில் 118 தையல்கள் போட்டுள்ளனர். இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்த போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும் மூன்றாவது நபரை தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அறிந்த அம்மாநில முதல்வர் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று காலை தம்பதியினரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்தார். மேலும் அந்த பெண்ணின் துணிச்சலை பாராட்டி அவருக்கு ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மற்றவர்களுக்கு அந்த பெண் முன்னுதாரமாக திகழ்ந்துள்ளார். மேலும் குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |