பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதுப் பற்றி முதல்முறையாக நடிகை பாவனா கூறியுள்ளார்.
பிரபல நடிகை பாவனா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் சென்ற 2017ஆம் வருடம் கொச்சியில் படப்பிடிப்பு முடிந்து காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். விசாரணையின் போது கைது செய்யப்பட்ட முக்கிய நபரான பல்சர் சுனில் மலையாள நடிகர் திலீப்தான் இவ்வாறு செய்ய சொன்னார் என்று கூறினான். போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் பாவனா முதல் முறையாக இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். இச்சம்பவத்தால் என் மரியாதை போச்சு. ஆனால் நான்நம்பிக்கையுடன் இருப்பேன், தைரியமாக போராடுவேன். நண்பர்கள் மற்றும் குடும்பங்கள் எனக்கு ஆதரவாக இருப்பினும் நான் தனிமையில் இருப்பது போல் உணர்கிறேன். நீதிமன்றத்தில் நடந்தவற்றையும் கூறியுள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு அது தொடர்புடைய நபர்கள் என்னை இணையத்தில் அசிங்கபடுத்தி வருகின்றனர். இதனால் எனக்கு மலையாள திரையுலகில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. சிலரை தவிர பலர் என்னை ஒதுக்கி வைக்கிறார்கள் என கூறியுள்ளார். பாவனா முதல் முறையாக இச்சம்பவம் குறித்து பேசியுள்ளார்.