இந்தியா மட்டும் அல்லாமல் தற்போது தமிழகத்திலும் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அரசு பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் இன்னமும் கொடூரமான முறையில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில் சென்னை கே.கே நகர் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தியுள்ளார். மேலும் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.