நடிகை கல்யாணி சிறு வயதில் நடந்த பாலியல் டார்ச்சர்கள் குறித்து அளித்துள்ள பேட்டி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி. இவர் சிறு வயதிலேயே பல படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ஜெயம்’ படத்தில் கதாநாயகிக்கு தங்கையாக நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் நடிகையாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கல்யாணி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் போன்ற டிவி சீரியல்களில் நடித்துள்ளார். இதற்கு பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தனது குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் கல்யாணி மெண்டர் ஆக பங்கேற்று வருகிறார்.
I was molested by that music director Says #kalyani pic.twitter.com/xep6aMWGj6
— chettyrajubhai (@chettyrajubhai) February 20, 2022
இதனை தொடர்ந்து நடிகை கல்யாணி தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் “தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இசையமைப்பாளரான ஒருவர். இவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். எனது 8 வயதில் நான் தூங்கும் போது என்னை தேவையில்லாத இடங்களில் தொடுவார். ஒருத்தர் நம்மளை தொடும் போது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும் அந்த உணர்வு ஏற்பட்டதும் நான் தூக்கத்திலிருந்து விழித்து விடுவேன். எனக்கு பயமாக இருக்கும் அதனால் நான் கண்மூடி அமைதியாக இருப்பேன். அவர் என் மீது தேவையில்லாமல் கைகளை வைப்பார் இப்போது நினைத்தால் கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது.
நான் இதைப்பற்றி எங்கேயும் சொன்னதில்லை என்னுடைய அம்மாவிடம் கூட சொன்னதில்லை. முதல் முறையாக நான் என் கணவரிடம் தான் சொன்னேன். அதுவும் அவருடைய நிகழ்ச்சியை பார்க்கும் போது தான் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. அப்போதுதான் என் கணவரிடம் அதை நான் சொன்னேன். என் கணவரும் என்னுடைய சூழ்நிலையை புரிந்து கொண்டு எனக்கு ஆறுதல் கூறினார். அந்த நிகழ்வை இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது. இது மாதிரியான பல பாலியல் தொல்லைகளால் மன ரீதியாக பாதிக்கப் பட்டேன். இதனால் தற்கொலைக்குக் கூட முயற்சி செய்தேன்” என்று உருக்கமாக பேசினார். நடிகை கல்யாணி அளித்த இந்த பேட்டி தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.