Categories
மாநில செய்திகள்

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு…. பல்வேறு எதிர்ப்புகள்….. வெளியான தகவல்…!!!!!

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, சர்க்கரை கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதம்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு கருதப்படுகிறது.

மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது அரசு அறிவிக்கும் ஊக்கத்தொகையும் வெள்ள நிவாரணம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான உதவித்தொகையும் ரேஷன் அட்டை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் எப்போதும் ஆர்வம் இருந்து கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இந்த ஆர்வத்தை கருத்தில் கொண்டு பாலியல் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு தற்போது ஸ்மார்ட் ரேஷன் கடை வழங்கி தெரிகிறது. தமிழ்நாட்டில் தனியாகவோ அல்லது குடும்பமாக வசித்து வரும் பாலியல் தொழிலாளர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கு அரசு முடிவு செய்திருக்கிறது.

இதன்படி 2022 மார்ச் 21 வரை 80 ஆயிரம் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் சக்கரபாணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள உணவுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பாலியல் தொழிலுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வேண்டும் என இதில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் இதுநாள் வரை இந்த தொழிலுக்கு சட்ட அங்கீகாரத்தை அரசு அளிக்கவில்லை. இந்த நிலையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படுவதன் மூலம் அவர்களது தொழிலை அரசை மறைமுகமாக அங்கீகரிப்பு போல் ஆகாதா என்ற கேள்வி பரவலாக எழுந்து  வருகிறது.

அத்துடன் பாலியல் தொழிலார்கள்  என்பதற்கான அரசின் வரையறை என்ன?, இவர்களுக்கான பிரத்யேக தரவு ஏதேனும் அரசிடம் உள்ளதா?, பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கும்போது அவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை அரசு கருத்தில் கொள்கிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக அரசின் இந்த முரணான நடவடிக்கை எழுப்பியிருக்கிறது.

Categories

Tech |