Categories
தேசிய செய்திகள்

“பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்துங்க”….. அடையாள அட்டை கொடுங்க….  உச்சநீதிமன்றம் அதிரடி….!!!

பாலியல் தொழில் செய்பவர்களுக்கு அடையாள அட்டையை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் தமிழகத்தில் 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களில் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்கி உள்ளது போல அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து அடையாள அட்டைகளையும் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர். கொரோனா தொற்று காலங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளானவர்கள் பட்டியலில் பாலியல் தொழிலாளர்களும் உள்ளனர்.

இவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் பாலியல் தொழிலாளர்களின் தொழில் குறித்த தகவல்களை மற்றும் அவர்களின் தனிப்பட்ட தகவல்களையும் ரகசியமாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக NACO என்ற சமூகம் சார்ந்த அமைப்புகளால் அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளர்களின் பட்டியல்களை சரிபார்த்த பிறகு அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். முக்கியமாக ரேஷன் அட்டை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி நாகேஸ்வரராக அமர்வு, `தொழிலை வைத்து யாரையும் பிரித்து பார்க்க முடியாது’ எனவும் `அவர்களும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவர்கள் அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது என்ற அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது. அவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Categories

Tech |