பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் தீர்பளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மேலப்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சுரேந்தர். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்ற 45 வயது மிக்க பெண்மணி ஒருவரை கண்மாய் அருகே வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அப்பெண்மணி அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சுரேந்தரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி சத்யா விசாரித்து தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சுரேந்தருக்கு10 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.