13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சசி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சசிக்கும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த சசி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை அடுத்து சசிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்த பெண் கடந்த 2008-ஆம் ஆண்டு குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சசியை தீவிரமாக தேடி வந்தனர். அவர் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமுறைவாக இருந்துள்ளார். இதனை அடுத்து கொல்லங்கோடு பகுதியில் இருக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தபோது போலீசார் சசியை சுற்றிவளைத்து கைது செய்தனர்.