Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்…. விமான நிலையத்தில் கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வினோத் பேசுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் தான் எந்த தப்பும் செய்யவில்லை என அவர் கண்ணீருடன் பேசி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வினோத் கோவாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலைய போலீசார் வினோத்தை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |