பாகிஸ்தான் நாட்டு தூதருக்கு எதிரான பாலியல் புகாரை தொடர்ந்து அவர் தூதரக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் பாகிஸ்தான் நாட்டு மூத்த தூதர் மிர்ஜா சல்மான் பெய்க் என்பவர் மீது தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். மாட்ரிட் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதர் சுஜாத் ரத்தோரிடம், அந்த பணியாளர் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 2 நபர் கொண்ட குழு ஒன்றை பார்சிலோனா மற்றும் மாட்ரிட் நகருக்கு வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
மேலும் விசாரணை முடிவில் அடிப்படையில் அதிகாரியை பதவியிலிருந்து நீக்கியதுடன், உடனடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள தலைமையத்திற்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண் அளித்த புகாரின்படி, பாகிஸ்தான் தூதர் சமூக ஊடகம் வழியே அந்த பணியாளருக்கு செய்திகளை அனுப்புவது வழக்கமாக உள்ளது. இதுவே பாலியல் புகாராக அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தூதர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.