Categories
மாநில செய்திகள்

பாலியல் புகார்…. முன்ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மனு தாக்கல்….!!!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி, 5 ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், கொண்டதாக இருக்கும் போது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் கூறி நடிகை சாந்தினி போலீசில் புகார் அளித்தார். அதுமட்டுமல்லாமல் மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்யச் சொன்னதாகவும், அதனால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனால்  தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் கைது உறுதியானதால் அமைச்சர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனையடுத்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Categories

Tech |