Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலியல் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் 14 வயது சிறுவர்கள்”…. பிரபல இந்தி நடிகை போலிஸில் புகார்…!!!!

பிரபல இளம் இந்தி நடிகை தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இளம் இந்தி நடிகையாக வலம் வரும் சிம்ரன் புதரூப் பாண்டியா தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்யப் போவதாகவும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் வந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, நான் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதற்கு ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் வந்த நிலையில் தற்போது அது எல்லை மீறிவிட்டது. என்னை பாலியல் வன்கொடுமை செய்யப் போவதாகவும் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டுகின்றார்கள். இதனால் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்திருக்கிறேன். என்னை மிரட்டுபவர்கள் 14 வயது சிறுவர்கள். சிறுவர்களுக்கு பெற்றோர்கள் கல்விக்காக மொபைல் போனை வாங்கி கொடுத்ததை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். ஆகையால் மகன்களை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |