2021 ஆம் நிதி ஆண்டில் அமெரிக்க ராணுவத்தில் பாலியல் வன்கொடுமைகளின் எண்ணிக்கை 13 சதவீதம் அதிகரித்து சாதனை படைத்திருப்பதாக பென்டகன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. பாதுகாப்புத் துறையின் பாலியல் வன்கொடுமை தடுப்பு மற்றும் பதிலளிப்பு அலுவலகம் 2021 செப்டம்பர் 30ஆம் தேதி நிலவரப்படி பணியாளர்கள் 866 பேர் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கிறது. இது கடந்த வருடம் 7813 ஆக இருந்தது ஆனால் ஒரு பகுதியில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் மட்டுமே அதிகாரிகளுக்கு கூறப்படுகின்றது. மேலும் எஸ் ஏ பி ஆர் ராணு ஆய்வுகளை பயன்படுத்தி பணிபுரியும் பணியாளர்களில் சுமார் 36,000 பெண்கள் மற்றும் ஆண்களில் 8.4 சதவீத பெண்கள் மற்றும் 1.5 சதவீத ஆண்கள் தேவையற்ற பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. மேலும் பாலியல் வன்கொடுமைகளின் பாதிப்பு குறித்த ஆய்வு விவரங்களில் உண்மையான அதிகரிப்பு இருந்ததா என்பதை அறிவில் பூர்வமாக தீர்மானிக்க முடியாது என பென்டகன் தெரிவித்துள்ளது.
ஆனால் மற்ற புள்ளி விவரங்கள் அதிகரிப்பதை புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன. அதாவது 2018 ஆம் வருடத்திற்கு பின் ஆரோக்கியமற்ற ராணுவ சூழலில் ஒட்டுமொத்த அதிகரிப்பையே குறிக்கின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது. 2006 ஆம் வருடம் இந்த பிரச்சனையை முதன் முதலில் உன்னிப்பாக ஆய்வு செய்ததிலிருந்து இது பெண்கள் மீதான பாலில் வன்கொடுமைகளின் மிக அதிகமான பாதிப்பு விகிதம் ஆகும் என்பதை தரவுகள் தெரிவிக்கின்றது என பென்டகன் படை அலுவலக நிர்வாக இயக்குனர் எலிசபெத் போஸ்டர் தெரிவித்துள்ளார். ஆண்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 2006 இல் இருந்து அதிக அளவில் இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகி வருவதாகவும் இவை மன உளைச்சல் மிகவும் மனசோர்வை தருகின்றன என புள்ளி விவரங்கள் தெரிகின்றன என பாஸ்டர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் ஜோ பைடன் ராணுவ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாக அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைகள் வீட்டு வன்முறைகள் மற்றும் சிறார்கள் மீதான தாக்குதல்கள் ராணுவத்தில் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என நீதிமன்றத்தின் வழக்குகளை எடுத்துச் செல்வதால் என்பது பற்றி முடிவுகள் ராணுவ அதிகாரிகளுக்கு பதிலாக சிறப்பு வழக்கறிஞர்களும் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த காலங்களில் பாலியல் துன்புறுத்தல் உரிமை கோரல்களை புறக்கணிப்பது மூடி மறைப்பது அல்லது இலகுவாக நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் அதிகாரிகள் மீது எழுந்துள்ளது. மேலும் ராணுவ மாற்றங்களை எதிர்த்தது முந்தைய அமைப்பு ஒழுங்காக பேணுவதற்கான அவசியத்தை சிறப்பாக செய்ததாக கூறியுள்ளது. ஆனால் பிரச்சினையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முந்தைய முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதால் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ராணுவத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபவர்கள் எப்படி சிறப்பாக சமாளிப்பது என்பது குறித்த பரிந்துரைகளை வழங்க ஒரு சுயாதீன ஆணையத்தின் நியமித்துள்ளார். வழக்குகளை தொடரவோ அல்லது வழக்குகளை தொடர அதிகாரத்தை கட்டளை படியிலிருந்து நீக்குவது தான் அதனை சமாளிப்பதற்கான ஒரே வழி என ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது.