Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை – மணப்பாறையில் பரபரப்பு …!!

திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த  அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி  மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் கொடுக்கப்பட்டது.

இதில் ராம்கி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  ராம்கியை போலீசார் தேடி வந்த நிலையில், ராம்கி முன்ஜாமீன் பெற்று சரணடைந்தார். இந்த நிலையில் மனமுடைந்து இருந்த பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இன்று காலை 11 மணியளவில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சில மணித்துளிள் அந்த பெண்  இறந்துவிட்டார். தற்போது உடற்கூறு ஆய்விற்காக சிறுமியில் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |