ஜார்கண்ட் மாநிலம் கிரிடிக் மாவட்டம் பென்காபாத் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த பெண் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் அந்த பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்தப்பெண் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டு உள்ளார். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அந்த பெண்ணை மீட்டு உள்ளனர். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெண்ணின் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவுவதற்கு பதில் அவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இதை பார்த்த கிராமத்தினர் சிலர் பெண்ணின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் தீ வைத்ததில் அந்தப் பெண் படுகாயம் அடைந்தார். அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீ வைத்த குடும்பம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அதனை தொடர்ந்து படுகாயமடைந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை கைது செய்தனர். மேலும் பெண்ணை தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடிய பெண்ணின் குடும்பத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்