தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்த மாசானமுத்து, அங்கு உள்ள சுடலைமாடன் கோவில் பூசாரியாக இருந்து வருகிறார். கோவிலுக்கு வரும் 35 வயது பெண் ஒருவர் தன் குடும்ப கஷ்டம் மற்றும் உடல் நிலை பாதிப்பு குறித்து கூறி பரிகாரம் பெற்றுள்ளார். அதற்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என பூசாரி கூறியுள்ளார். அதனால் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி அந்தப் பெண் தனது 15 வயது மகளை அழைத்துக் கொண்டே பூசாரி உடல் ராமேஸ்வரத்திற்கு சென்றார்.
அங்கு விடுதியில் தங்கியிருந்தபோது பூஜை செய்ய வேண்டும் என்று கூறி தனி அறையில் வைத்து மாசானமுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தாயை அளித்த புகாரின் பேரில் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து பூசாரியை கைது செய்தனர். அந்த வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, பூசாரியை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டதோடு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.