மதுரை நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 2012 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் கூட்டாக பலாத்காரம் செய்துள்ளனர். இதில் அந்த இளம் பெண் கர்ப்பமாகியுள்ளார். இது பற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தான் காரணம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் பற்றி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் போலீஸர் வழக்கு பதிவு செய்து முருகன்(59), நாக பாண்டி(27), முனியாண்டி(56), விக்னேஸ்வரன்(29), பழனிவேல்(29), சங்கர்(31) போன்ற ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட மகளிர் கோட்டில் விசாரிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் லதா சாந்தி ஆஜராகி உள்ளார். விசாரணையின் முடிவில் ஆறு பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர்கள் தலா பத்து வருடம் சிறை தண்டனையும், தலா 4000 அபராதம் விதித்து நீதிபதி கிருபாகரன் மதுரம் நேற்று தீர்ப்பளித்துள்ளார். வழக்கு நிலுவையில் இருந்த போது குற்றம் சாட்டப்பட்டிருந்த முருகன் இறந்துவிட்டார். அதனால் மற்ற ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது.
அது பெண் குழந்தை என்பதனால் தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தையின் விவரம் தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கும் அவரது குழந்தைக்கும் உரிய இழப்பீட்டை வழங்க அரசுக்கு உத்தரவிட கோட்டு முடிவு செய்திருக்கின்றது. அதனால் அந்த குழந்தையை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிவிக்கும்படி போலீசார்க்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.