Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான மடாதிபதி… திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி…!!!!

சித்ர துர்காவில் அமைந்துள்ள முருகா மடம் மிகவும் பிரபலமான மடமாகும். பொது சேவைகளில் ஈடுபட்டு வருவது. பள்ளிகள் கட்டி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்குகின்றது. அரசியல்வாதிகள் முக்கிய புள்ளிகள் உட்பட மடத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மடத்தின் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 2  மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக இரு மாணவிகளும் போலீசில் புகார் அளித்துள்ளனர். கைது செய்யும்படி வலியுறுத்தி பல அமைப்புகள் போராட்டம் மேற்கொண்டுள்ளது. கைது பயத்தில் மகாராஷ்டிராவிற்கு தப்பி செல்ல முயற்சி செய்த அவரை போலீசார் வழியில் மடக்கி பிடித்து மீண்டும் சித்தரதுர்காவிற்கு அழைத்து வந்துள்ளனர். அதன் பின் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

மேலும் நீதிபதி முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சிவமூர்த்தி முருகா சரணரு எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு முருகா மடத்திற்கு சென்ற போலீச நீண்ட நேரம் விசாரணைக்கு பின் இரவு 10 மணிக்கு சிவமூர்த்தி முருகா சரணரை 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செல்லகரேவுக்கு அழைத்து சென்றுள்ளனர். டெபுடி எஸ்பி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டபின் அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் மாவட்டம் மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாலை 3 மணியளவில் சித்ரதுர்கா நகரில் இரண்டாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி கோமளா முன்னிலையில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

அப்போது மடாதிபதி தரப்பு வக்கீல் ஜாமீன் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளார் மனுவை நிராகரித்த நீதிபதி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யும்படி தெரிவித்து 14 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் சிறையில் உறக்கமின்றி தவித்த அவர் நேற்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை அதிகாரிகள் உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் அவருக்கு இதய நோய் அதிக ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் மடாதிபதியை பெங்களூரில் ஜெயதேவா மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தப்பட்டுள்ளது ஏர் ஆம்புலன்ஸ் வழியாக செல்வது கஷ்டம் என்ற காரணத்தினால் சாலை வழியாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர் இதனால் சித்ர துர்கா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தாவணகரேவின் ஹெப்பாலு விரக்த மடத்தின் மஹான்தருத்ரா சுவாமிகள் மருத்துவமனைக்கு வந்து சிவமூர்த்தி முருகா சரணடை சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

Categories

Tech |