கனட நாட்டில் வசித்து வரும் பால்ஹக்கீஸ் (69) என்பவர் சென்ற 2006ஆம் வருடம் கிராஷ் எனும் திரைப்படத்தில் சிறந்த திரைக் கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றார். இவர் சென்ற செவ்வாய்கிழமை இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்துகொள்ள சென்றார். அங்கு சுற்றுலா நகரமான புக்லியாவுக்கு அருகிலுள்ள ஒஸ்துனியாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டார். இதற்காக அவர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில் ஒரு இளம்பெண்ணை, பால் ஹக்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
அதாவது வெளிநாட்டை சேர்ந்த அப்பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக பால் ஹக்கீஸ் உறவுகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பெண்ணின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பெண்ணை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டைரக்டர் பால்ஹக்கீசை நேற்று காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
தற்போது கைதானவரிடம் உயர்அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகவல்கள் இத்தாலிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பால் ஹக்கீசின் வக்கீல்கள் கூறியதாவது “இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. விசாரணை முடிந்த பிறகு பால் ஹக்கீஸ் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும்” என்று கூறினர்.